ஆன்மிக களஞ்சியம்

வேண்டுதல்களை நிறைவேற்றும் காமதேனு வழிபட்ட மாடம்பாக்கம் சரபேஸ்வரர்

Published On 2024-08-12 10:27 GMT   |   Update On 2024-08-12 10:27 GMT
  • இந்த சரபேஸ்வரரின் சக்திகளாக பிரத்தியங்கிரா தேவியும், சூலினியும் விளங்குகின்றனர்.
  • இந்த இருவரையும் சரபேஸ்வரரின் மனைவியர் என்று அழைக்கின்றனர்.

சென்னை, தாம்பரத்தில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ள மாடம்பாக்கம், தேனுபூரீஸ்வரர் ஆலயம், இதே மூன்றாம் குலோத்துங்க சோழனால் நிர்மானிக்கப்பட்டதாகும்.

நான்கு வேதங்களும் வந்து வணங்கியதால் இத்தலத்திற்கு சதுர்வேதமங்களம் என்ற பெயரும், காமதேனு வழிபட்டதால் காமதேனுபுரி என்ற பெயர்களும் உண்டு.

இக்கோவில் உள்ள சரபேஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று கூறப்படுகின்றது.

இவரை வழிபட்டால் மனதால் எண்ணிய காரியங்கள் யாவும் விக்கினமின்றி உடனே நிறைவேறும் என்றும் கூறப்படுகிறது.

இந்த சரபேஸ்வரரின் சக்திகளாக பிரத்தியங்கிரா தேவியும், சூலினியும் விளங்குகின்றனர்.

இந்த இருவரையும் சரபேஸ்வரரின் மனைவியர் என்று அழைக்கின்றனர்.

சரபரின் இரு இறக்கைகளாக விளங்கும் இவர்கள் சக்தியின் திருஅவதாரம் என்றும் கூறப்படுகின்றது.

இம்மூவருக்கும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 4.30 முதல் 6 மணிக்குள் நடைபெறும் ராகுகால பூஜை மிகவும் சிறப்புடையது.

இதுமட்டுமே அல்லாது பிரதோஷ கால பூசையும் இங்கு சிறப்பாக வழிபடப்படுகின்றது.

தொடர்ந்து ஆறு வாரங்கள் சரபேஸ்வரர் பூசையில் கலந்து கொண்டு தரிசித்தால் அவரவர் மனதில் நினைத்த காரியங்கள் உடனுக்குடன் நிறைவேறுகின்றன என அனுபவப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

காதல், திருமணம், மக்கட்பேறு, கல்வி முதலானவை குறித்த வேண்டுதல்கள் இக்கோவிலில் உடனுக்குடன் நிறைவேறுவதால் இக்கோவிலுக்குப் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

Tags:    

Similar News