ஆன்மிக களஞ்சியம்

விளக்குகளில் புனிதமான காமாட்சி விளக்கு

Published On 2024-11-05 05:53 GMT   |   Update On 2024-11-05 05:53 GMT
  • பூஜைக்கு முன் பூவும், பொட்டும் வைத்து மங்கலத்துடன் தீபம் ஏற்றி, தினமும் வழிபடத்தக்கது.
  • பல குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக காமாட்சியம்மன் விளக்குகளை பொன் போலப் போற்றிப் பாதுகாப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

விளக்குகளில் இது புனிதமானது. எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டிய விளக்கு.

பூஜைக்கு முன் பூவும், பொட்டும் வைத்து மங்கலத்துடன் தீபம் ஏற்றி, தினமும் வழிபடத்தக்கது.

பல குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக காமாட்சியம்மன் விளக்குகளை பொன் போலப் போற்றிப் பாதுகாப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

சிலர் தம் முன்னோர்கள் ஏற்றிய காமாட்சியம்மன் விளக்குச் சுடர் தொடர்ந்து, நிலைத்து, எரியும்படி கவனித்துக் கொள்கின்றனர்.

புதுமனை புகும்போதும், மணமக்கள் மணப் பந்தலை வலம் வரும் போதும், எல்லா இருள்களையும் நீக்கியபடி, அருள் ஒளியை அனைவருக்கும் அருளியபடி முன்னால், பக்தியுடன் ஏந்திச் செல்லப்படும் விளக்கும் காமாட்சியம்மன் திருவிளக்கே.

புதுப்பெண் புகுந்த வீட்டுக்கு வரும்போது, "நிறைநாழி" எனப்படும் படியில் நெல் வைத்து அதன் மீது காமாட்சி அம்மன் விளக்கின் மீது தீபம் ஏற்றப்படும்.

பெண்ணுக்கு சீர்வரிசைகளை தரும்போது காமாட்சியம்மன் விளக்கும், இரண்டு குத்து விளக்குகளும் அவசியம் வழங்கப்பட வேண்டும்.

விளக்குகள் தமிழர் வாழ்வில் ஓர் அங்கம். மங்கலப் பொருட்களில் இந்த காமாட்சி விளக்கும் ஒன்று.

Similar News