ஆன்மிகம்

திருவரங்குளம் அருகே முனீஸ்வரர் கோவிலில் ஆனி மாத செவ்வாய் கரக திருவிழா

Published On 2016-06-29 06:59 GMT   |   Update On 2016-06-29 06:59 GMT
திருவரங்குளம் அருகே முனீஸ்வரர் கோவிலில் ஆனி மாத செவ்வாய் கரக திருவிழா தொடங்கியது.

திருவரங்குளம் அருகேயுள்ள கைக்குறிச்சி சுந்தர வினாயகர், முனீஸ்வரர், பெரிய கருப்பர், சின்னக்கருப்பர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோரும் ஆனி மாதத்தில் செவ்வாய் கரக திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டும் செவ்வாய் கரக திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வீடுதோரும் விரதமிருந்தும், சுந்தர வினாயகர் கோவிலில் மாவிலை தோரனம் கட்டி, மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று காப்புக்கட்டுதலுடன் திருவிழா துவங்கியது.

தினமும் இரவில் சாமியாடிகள் நான்கு விதிகளிலும் சுவாமி ஊர்வலத்துடுன் வீடு, வீடாகச் சென்று செவ்வாய் கரக அர்ச்சணை செய்து வானவேடிக்கை மேளதாளத்துடுன் வழிபாடு நடத்தி வருகின்றனர். வருகின்ற 5.7.2016 அன்று அதிகாலை தீமிதித்தல் விழா நடைபெறும்.

Similar News