ஆன்மிகம்

வீரத்தின் தெய்வமாக பாவிக்கப்படும் துர்க்கை தேவி

Published On 2016-09-27 07:35 GMT   |   Update On 2016-09-27 07:35 GMT
வீரத்தின் தெய்வமாக பாவிக்கப்படும் துர்க்கை தேவி சிவப்பிரியை ஆவார்.
நெருப்பின் அழகும், ஆவேசப் பார்வையும் கொண்டவர் துர்க்கை. வீரத்தின் தெய்வமாக பாவிக்கப்படும் இவர் சிவப் பிரியை ஆவார். இச்சா சக்தியான துர்க்கையை, ‘கொற்றவை’, ‘காளி’ என்றும் அழைப்பார்கள். 

வீரர்களின் தொடக்கத்திலும், முடிவிலும் வழிபாட்டுக்குரியவர் துர்க்கை. இவள் மகிஷன் என்ற அசுரனுடன் ஒன்பது இரவுகள் போரிட்டாள். இவையே நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது. வெற்றியை கொண்டாடிய 10-ம் நாள் விஜயதசமியாகும்.

வன துர்க்கை, சூலினி துர்க்கை, ஜாதவேதோ துர்க்கை, ஜ்வாலா துர்க்கை, சாந்தி துர்க்கை, சபரி துர்க்கை, தீப் துர்க்கை, சூரி துர்க்கை, லவண துர்க்கை ஆகியோர் நவ துர்க்கை என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் துர்க்கையின் அம்சங்கள். 

Similar News