ஆன்மிகம்

செல்வம் தரும் லட்சுமி

Published On 2016-10-08 07:57 GMT   |   Update On 2016-10-08 07:57 GMT
லட்சுமி செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள்புரிபவள். இவள் விஷ்ணு பிரியை, கிரியா சக்தி.
லட்சுமி தேவி செல்வத்தின் தெய்வம். மலரின் மென்மையுடன் அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள். இவள் விஷ்ணு பிரியை, கிரியா சக்தி.

இலட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருக்கிறாள். இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது. முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள்புரிபவள்.

இவளுக்குத் தனிக்கோயில் இருக்குமிடம் திருப்பதியிலுள்ள திருச்சானூர். அஷ்ட இலட்சுமியாக அருள்பாலிக்கிறாள் ஆதி லட்சுமி, இலட்சுமி, தன இலட்சுமி, தானிய இலட்சுமி, சந்தான இலட்சுமி, வீர இலட்சுமி, விஜய இலட்சுமி, கஜ இலட்சுமி. இவர்கள் இலட்சுமியின் அம்சங்கள்.

Similar News