ஆன்மிகம்

தைப்பூச திருவிழா: நாளை சேலம் காவடி பழனியாண்டவர் கோவிலில் சிறப்பு பூஜை

Published On 2017-02-08 06:00 GMT   |   Update On 2017-02-08 06:00 GMT
சேலம் காவடி பழனியாண்டவர் கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நாளை(வியாழக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோமாதா பூஜை நடைபெறுகிறது.
சேலம் காவடி பழனியாண்டவர் கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நாளை(வியாழக்கிழமை) சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோமாதா பூஜை நடைபெறுகிறது. 6 மணிக்கு ஸ்ரீ காவடி பழனியாண்டவருக்கு 64 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. 7 மணிக்கு சாமிக்கு தங்க கவசம் சாத்தப்படுகிறது. 9 மணிக்கு காவடிகள் புறப்பாடும், 12 மணிக்கு காவடிகள் கோவிலை அடைதல், சிறப்பு பூஜை, அன்னதானம் போன்றவை நடைபெறுகிறது.

மாலை 6 மணிக்கு தீர்த்த காவடிகள் புறப்பாடும், 6.30 மணிக்கு தீர்த்தாபிஷேகம், 108 லிட்டர் பால் அபிஷேகம், இரவு 7 மணிக்கு தங்க ரதம் புறப்பாடும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சோமசுந்தரம், செல்வி ஆகியோர் செய்து வருகின்றனர்.

Similar News