ஆன்மிகம்

குங்குமவல்லி தான்தோன்றீஸ்வரர் கோவிலில் இன்று வளைகாப்பு திருவிழா

Published On 2018-02-02 06:40 GMT   |   Update On 2018-02-02 06:40 GMT
திருச்சி உறையூர் குங்குமவல்லி தான்தோன்றீஸ் வரர் கோவிலில், 68-வது ஆண்டு வளைகாப்பு திருவிழா இன்று தொடங்குகிறது.
திருச்சி உறையூர் குங்கும வல்லி சமேத தான்தோன்றீஸ்வரர் கோவிலில் 68-வது ஆண்டு வளைகாப்பு திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 4-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இன்று காலை 7.30 மணிக்கு நடை பெறும் ஹோம பூஜையில் கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் நடைபெற வேண்டி பிரார்த்தனை செய்யப்படு கிறது.

மதியம் 2.30 மணிக்கு குங்கும வல்லிக்கு சிறப்பு தீபாராதனை நடத்தி பூஜையில் பங்கேற்கும் கர்ப்பிணி பெண்களுக்கு 48 நாட்கள் அர்ச்சிக்கப்பட்ட வளையல், குங்குமம் மற்றும் அம்பாள் படம் வழங்கப்படுகிறது. நாளை (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு குழந்தை பாக்கியம் வேண்டி வரும் பெண்களுக்காக சிறப்பு ஹோமம் நடத்தப்படுகிறது.

4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணி முதல் 9 மணி வரை ஆண், பெண் இருபாலருக்கும் திருமணத்திற்கான சிறப்பு பூஜையும், மாங்கல்ய பூஜையும் நடத்தப்படுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் கருணாமூர்த்தி, ஸ்தானிகர் ஹரிகர குருக்கள் ஆகியோர் செய்து உள்ளனர்.

Similar News