ஆன்மிகம்

நெடுங்கூர் பூஞ்சோலையம்மன் ஆலடியான் கோவில் தேரோட்டம்

Published On 2018-06-09 03:03 GMT   |   Update On 2018-06-09 03:03 GMT
திருச்சி பூஞ்சோலையம்மன் கோவில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் நெய்க்குளம் ஊராட்சி நெடுங்கூரில் பூஞ்சோலையம்மன் ஆலடியான் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த மே 29-ந் தேதி காப்புக்கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதியுலா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

தேர் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது. விழாவில் நெய்க்குளம், பி.கே.அகரம், நம்புக்குறிச்சி, ஊட்டத்தூர், பாடாலூர், சிறுகனூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர், கிராமமுக்கியஸ்தர்கள் செய்திருந்தனர். விழாவையொட்டி கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆங்காங்கு பக்தர்களுக்கு அன்னதானம் நீர்மோர் வழங்கப்பட்டது. 
Tags:    

Similar News