ஆன்மிகம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அணையா தீபம்

Published On 2018-06-23 04:22 GMT   |   Update On 2018-06-23 04:22 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி சன்னதி கொடிமரம் அருகில் மற்றும் 6 இடங்களில் அணையா தீபம் வைக்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கற்பூரம், விளக்கேற்ற வேண்டாம் என பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதற்கு பதில் அணையா தீபம் ஏற்றி பாதுகாக்க அறநிலையத்துறை உத்தரவிட்டது.

அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி சன்னதி கொடிமரம் அருகில், அம்மன் சன்னதி கொடிமரம் அருகில், கால பைரவர் சன்னதி, துர்க்கையம்மன் கோவில், சோமாசிபாடி முருகர் கோவில், அடிஅண்ணாமலை கோவில் ஆகிய 6 இடங்களில் அணையா தீபம் வைக்க அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

இதற்காக சினிமா நடிகர் அம்சவர்தன் ரூ.3 லட்சம் மதிப்பில் 6 அணையா தீபங்களை நன்கொடையாக கோவிலுக்கு வழங்கி, அதனை ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். அப்போது கோவில் ஊழியர்கள் உடனிருந்தனர்.

இந்த அணையா தீபத்தில் பக்தர்கள் எவ்வளவு எண்ணெய் ஊற்றினாலும் நிறையும் வகையில் கலன்கள் வைத்து பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. எளிதில் கருகாத திரி போடப்பட்டு உள்ளது. தீபம் அணையாமல் இருக்க காற்று சென்று வர துவாரம் அமைக்கப்பட்டு உள்ளது. 
Tags:    

Similar News