ஆன்மிகம்

புதன் பகவானுக்கு உரியவை

Published On 2018-07-14 09:12 GMT   |   Update On 2018-07-14 09:12 GMT
உடலில் நரம்பு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் இங்கே புதனை வழிபட நிவர்த்தி பெறலாம். புதன் பகவானுக்கு உரியவற்றை அறிந்து கொள்ளலாம்.
வழிபட உகந்த தினம்    : புதன்கிழமை
ராசி     :    மிதுனம், கன்னி
திக்கு     :    வடகிழக்கு
அதிதேவதை     :    விஷ்ணு
பிரத்யதி தேவதை     :    நாராயணன்
நிறம்     :    வெளிர்பச்சை
வாகனம்    :    குதிரை
புதனுக்குப் விருப்பமானவை
பயிறு    :    பச்சைப் பயறு
மலர்    :    வெண்காந்தள்
வஸ்திரம்    :    பச்சைநிற ஆடை
ரத்தினம்    :    மரகதம்
நிவேதனம்    :    பாசிப்பரும்புப் பொடி அன்னம்
சமித்து    :    நாயுருவி
உலோகம்    :    பித்தளை

வழிபாட்டுக்கு ஏற்ற நாள், நேரம்

திருவெண்காடு, புதன் பகவானை வழிபட, புதன் பகவான் உச்சம், ஆட்சிபெறும் புரட்டாசி மாதமும், ஆட்சிபெறும் ஆனி மாதமும், புதன் நட்சத்திரங்கள் ஆகிய ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகியவை வருகின்ற புதன் கிழமைகளில், புதன் ஓரையில், வழிபாட்டுப் பரிகாரம் செய்வது மிக, மிக சிறப்பாகும்.
புதன்கிழமையில், புதன் ஓரை காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் காலை 9 மணி வரையிலும் ஆகும்.
Tags:    

Similar News