ஆன்மிகம்
கொடியேற்றம் நடந்ததையும், பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியதையும் காணலாம்.

அரசாப விமோசன பெருமாள் கோவில் பங்குனி திருவிழா தொடங்கியது

Published On 2019-03-14 06:19 GMT   |   Update On 2019-03-14 06:19 GMT
கண்டியூர் அரசாப விமோசன பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருவையாறு அருகே கண்டியூரில் அரசாப விமோசன பெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 18 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு அரசாப விமோசன பெருமான் கோவிலில் பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக கொடி ஊர்வலம் நடந்தது. இதையடுத்து பூதேவி, ஸ்ரீதேவியுடன் அரசாப விமோசன பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் வருகிற 16-ந் தேதி கருட சேவை நடை பெறுகிறது. அதைத் தொடர்ந்து 20-ந் தேதி வெண்ணெய்த்தாழி உற்சவமும், 21-ந் தேதி தேரோட்டமும் நடக்கிறது. தேரோட்டத்தின்போது கமலவள்ளி தாயாருடன், அரசாப விமோசன பெருமாள் எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார். இதையடுத்து தீர்த்தவாரி உற்சவமும், 28-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அதிகாரி பழனிவேல், தக்கார் அரவிந்தன், கோவில் எழுத்தர்கள் ஜெகதீசன், கண்ணன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். 
Tags:    

Similar News