ஆன்மிகம்
கொடியேற்றம் நடந்ததையும், உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்ததையும் படத்தில் காணலாம்.

ராஜகோபால சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

Published On 2019-03-14 07:56 GMT   |   Update On 2019-03-14 07:56 GMT
பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 22-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
பாளையங்கோட்டையில் மிகவும் பழமை வாய்ந்த ராஜகோபால சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கொடிமரம் அலங்கரித்து வைக்கப்பட்டது. அதில் கொடியேற்றப்பட்டது.

பின்னர் கொடிமரத்துக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

வருகிற 22-ந் தேதி காலை 7.35 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு தவழ்ந்த கோலத்தில் கிருஷ்ணன் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறது. 23-ந் தேதி காலை 7 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் அய்யனார் மற்றும் ராஜகோபாலன் பஜனை குழுவினர் செய்துள்ளனர். 
Tags:    

Similar News