வழிபாடு
சிவாலய ஓட்டம்

சிவாலய ஓட்டம்: நூறு கிலோ மீட்டர் தொடர் ஓட்டம்

Published On 2022-03-01 04:47 GMT   |   Update On 2022-03-01 04:47 GMT
சிவராத்திரிக்கு முதல் நாளும், சிவராத்திரி அன்றும் ஆயிரக்கணக்கான அடியார்கள் தொடர் ஓட்டமாகச் சென்று பன்னிரண்டு சிவாலயங்களைத் தரிசிக்கின்றனர்.
தற்காலத்தில், சில வரலாற்று நிகழ்வுகளை நினைவு கொள்ளும் வகையில் அவ்வப்பொழுது, தொடர் ஓட்டங்கள் நடைபெறுகின்றன. விளையாட்டு வீரர்களும் மற்றவர்களும் கலந்து கொள்ளும் இத்தகைய ஓட்டங்களால் முக்கிய வரலாற்று உண்மைகள் மக்களுக்குத் தெரிய வருகின்றன. அத்துடன், உடல்நலம், நல்லிணக்கம் ஆகியவை வளர்கின்றன.

தமிழகத்தில் குமரி மாவட்டத்தில் சிவராத்திரி நாளில் அத்தகைய தொடர் ஓட்டம் இடம் பெறுகிறது. சிவராத்திரிக்கு முதல் நாளும், சிவராத்திரி அன்றும் ஆயிரக்கணக்கான அடியார்கள் தொடர் ஓட்டமாகச் சென்று பன்னிரண்டு சிவாலயங்களைத் தரிசிக்கின்றனர்.

அத்தலங்கள் விவரம் வருமாறு:-

1. திருமலை
2. திருக்குறிச்சி
3. திற்பரப்பு
4. திருநந்திக்கரை
5. பொன்மலை
6. பன்னிப்பாக்கம்
7. கல்குளம்
8. மேலங்கோடு
9. திருவிடைக்கோடு
10. திருவிதாங்கோடு
11. திருப்பன்றிக்கோடு
12. திருநட்டாலம்
Tags:    

Similar News