வழிபாடு

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அமெரிக்கா, கனடாவில் ஏழுமலையான் திருக்கல்யாணம்

Published On 2023-05-12 04:59 GMT   |   Update On 2023-05-12 04:59 GMT
  • திருக்கல்யாண உற்சவம் ஜூன் 4-ந் தேதி தொடங்கி ஜூலை 23-ந் தேதி வரை நடத்தப்படுகிறது.
  • திருக்கல்யாணம் அமெரிக்கா, கனடா நாடுகளில் முக்கிய 14 நகரங்களில் நடத்தப்படுகிறது.

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏழுமலையான் திருக்கல்யாணம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வெகு விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது.

திருக்கல்யாண நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

வெளிநாட்டு பக்தர்கள் திருக்கல்யாண உற்சவ தரிசனம் செய்யும் வகையில் ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் திருக்கல்யாணம் நடந்த ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த ஆண்டு திருக்கல்யாண உற்சவம் ஜூன் மாதம் 4-ந் தேதி தொடங்கி ஜூலை 23-ந் தேதி வரை அமெரிக்கா, கனடா நாடுகளில் முக்கிய 14 நகரங்களில் நடத்தப்படுகிறது.

திருக்கல்யாணம் உற்சவம் குறித்த சுவரொட்டிகளை முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி முன்னிலையில் தாடி பள்ளியில் உள்ள முகாம் அலுவலகத்தில் நேற்று வெளியிட்டனர்.

அமெரிக்கா, கனடாவில் திருக்கல்யாண உற்சவம் நடத்துவதை அந்தந்த மாநகர நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

கல்யாண உற்சவத்திற்கு தேவையான பூஜை பொருட்கள், பூக்கள், வேத பண்டிதர்களை நியமிப்பது, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பதியில் நேற்று 67,853 பேர் தரிசனம் செய்தனர். 33,381 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3. 19 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

இலவச தரிசனத்தில் 24 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News