குழந்தை பராமரிப்பு

பெற்றோர்கள் வீட்டில் சீரியல் பார்த்தால் பிள்ளைகள் எப்படிப் படிப்பார்கள்? - கோபிநாத் கொடுத்த அட்வைஸ்

Published On 2024-09-02 07:30 GMT   |   Update On 2024-09-02 07:30 GMT
  • பிள்ளைகள் மொபைல் போன் நோண்ட கூடாது என்று தாய்மார்கள் விரும்பினால் அவர்கள் சீரியல் பார்க்கக்கூடாது.
  • பிள்ளைகள் குற்றவாளிகள் இல்லை அவர்கள் சமூகத்தின் நெருக்கடிக்குள் இருக்கிறார்கள்

பெற்றோர்கள் வீட்டில் சீரியல் பார்த்தால் பிள்ளைகள் எப்படிப் படிப்பார்கள்? என்று நீயா நானா புகழ் கோபிநாத் கேள்வி எழுப்பியுள்ளார். நெல்லையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் உரையாற்றிய கோபிநாத்,

ஒரு குழந்தையை தந்தை மேலே தூக்கிப்போட்டு பிடிக்கும்போது அது சிரித்துக்கொண்டே மேலே சென்று சிரித்துக்கொண்டே கீழே வரும். தந்தை அவ்வாறு செய்யும்போது தாய் கேள்வி கேட்பார் 'ஏங்க விட்டுட மாடீங்களே' என்று, ஆனால் குழந்தை கேட்காது ஏனென்றால் அதற்கு தெரியும் தனது தந்தை போகும் தன்னை விடமாட்டார் என்பது எனவே தான் அது சந்தோசமாக மேலேயும் கீழேயும் சென்று வருகிறது.

மாணவர்களே நீங்கள் யார் என்பதை நீங்கள் முடிவு செய்ய முடியாது உங்களின் கேரக்டர்க்தான் முடிவு செய்யும். உங்களது உழைப்பையும் வெற்றியையும் தொடர்புப்படுத்துவது ஒழுக்கம், 2000 த்திலும் அதுதான் 3000 திலும் அதுதான். உலகம் அழியும் வரை அதுதான். டிசிப்ளின் இஸ் த கீ .

மகனோ மகளோ காலை 5 மணிக்கு எழுந்து எக்சர்சைஸ் பண்ண வேண்டும் என்று தந்தை ஆசைப்பட்டால் அவரும் அந்நேரம் எழுந்திருக்க வேண்டும். பிள்ளைகள் மொபைல் போன் நோண்ட கூடாது என்று தாய்மார்கள் விரும்பினால் அவர்கள் சீரியல் பார்க்கக்கூடாது. நீங்கேள சீரியல் பார்த்தால் பிள்ளைகள் போன் தன பார்க்கும். பிள்ளைகளுடன் பெற்றோர்கள் பேச வேண்டும். இல்லையென்றால் அவர்கள் போனில் வெளியில் தான் தொடர்பை தேடிக்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும்.

அவர்களுக்குப் பேச யாரும் இல்லாத சூழ்நிலையை உருவாக்கக்கூடாது. அவர்களைத் தூரத்திலிருந்து பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். மாணவர்கள் ஆசியர்களுடன் உரையாட வேண்டும். இன்று அதற்கான சூழல் இல்லாமல் ஆகிவிட்டது. அதேபோல் பிள்ளையின் வளர்ப்பில் தந்தையின் பங்கும் இருக்க வேண்டும். வேலை பார்த்து காசு கொண்டு வருவது மட்டும் அவர்களின் வேலையாக இருக்கக்கூடாது.

பிள்ளைகள் குற்றவாளிகள் இல்லை அவர்கள் சமூகத்தின் நெருக்கடிக்குள் இருக்கிறார்கள், வீட்டுக்குள் உங்களை பார்த்துத்தான் அவர்கள் வளர்கிறார்கள், அவர்கள் உங்களின் பிள்ளைகள் மட்டுமல்ல . இந்த சமூகத்துக்குச் சொந்தமானவர்கள் எனவே அவர்களை வளர்ப்பதில் கவனம் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  

Tags:    

Similar News