லைஃப்ஸ்டைல் (Health)

முத்திரை பயிற்சி செய்யும் முன் கவனிக்க வேண்டிவை

Published On 2018-10-17 04:58 GMT   |   Update On 2018-10-17 04:58 GMT
உடல்நிலையில் பிரச்சனை உருவாவதைத் தடுக்கவும், பிரச்சனை வந்தால் குணமடையவும் யோக முத்திரை பயிற்சிகளைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் பலன் பெற முடியும்.
உடலின் இந்த ஐந்து நிலைகளும் சமச்சீராக இருந்தால் ஒருவர் ஆரோக்கியமானவராக இருப்பார். அவற்றில் ஏதாவது ஒன்று குறைந்தாலும் உடலில் நோய்த்தாக்கம் உண்டாகும். அப்படி உடல்நிலையில் பிரச்சனை உருவாவதைத் தடுக்கவும், பிரச்சனை வந்தால் குணமடையவும் யோகப் பயிற்சிகளைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் முடியும் என்று பரிந்துரைக்கின்றன சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவங்கள்.

குறிப்பாக, முத்திரை பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் உறுப்புக்கான செயல்கள் தூண்டப்படுகின்றன என்கிறார்கள் யோகக் கலை நிபுணர்கள்.

முத்திரை பயிற்சி செய்யும் முன்...

முத்திரை பயிற்சிகள் நமது கைகளில் உள்ள ஐந்து விரல்களை வைத்தே செய்யப்படுகிறது. இந்த ஐவிரல்களும் ஐம்பூதங்களை குறிப்பவை என்கின்றன யோக சாஸ்திரம். கட்டைவிரல் நெருப்பையும், ஆள்காட்டி விரல் காற்றையும், நடுவிரல் ஆகாயத்தையும், மோதிரவிரல்
நிலத்தையும், சுண்டுவிரல் நீரையும் குறிக்கிறது.

* பத்மாசனத்தில் அமர்ந்து யோக முத்திரைகளை செய்வது நல்லது.

* நேரம் கிடைக்காதவர்கள் டி.வி பார்க்கும்போது, நிற்கும்போது, பயணம் செய்யும்போதுகூட செய்யலாம்.

* முத்திரைகளை விரலோடு விரல் அழுத்தி செய்ய வேண்டும் என்பதில்லை. மெதுவாகத் தொட்டாலே போதும்.

* எல்லா முத்திரையும் நெருப்பைக் குறிக்கும். அதனால், கட்டைவிரலை இணைத்துத்தான் செய்ய வேண்டும்.

* ஆரம்பத்தில் 10- 15 நிமிடம் செய்யத் தொடங்கி, போகப்போக நேரத்தை கூட்டிக்கொண்டே போகலாம். 45 நிமிடங்கள் வரை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

* வலது பக்க உறுப்புகளுக்கு இடது கையால் செய்வதும், இடப்பக்க உறுப்புகளுக்கு வலது கையால் செய்வதும் பலனைக் கொடுக்கும்.
Tags:    

Similar News