உடற்பயிற்சி

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆமை போஸ் யோகா

Published On 2023-02-08 04:16 GMT   |   Update On 2023-02-08 04:16 GMT
  • ஆஸ்துமாவின் அறிகுறிகளைக் குறைக்க முடியும்.
  • நோய் எதிர்ப்பு செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவும்.

யோகாசனம் செய்வது நமது உடல் மற்றும் மனத்துக்கு பலவித ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும். யோகாசனத்தில் முக்கிய ஆசனமான கூர்மாசனம் அல்லது ஆமை போஸ் யோகா என்று அழைக்கப்படும் இந்த ஆசனம் ஆமை வடிவத்தைப் பிரதிபலிக்கும்.

இந்த ஆசனம் கால்கள், வயிறு, தொடைகள் மற்றும் தொடை எலும்புகளை நீட்சியடைய செய்ய உதவும்.

அதுமட்டுமின்றி பல நோய்களுக்கு உதவுகின்றது. அந்தவகையில் இதனை எவ்வாறு செய்வது? இதில் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

செய்முறை

இந்த ஆசனம் செய்வதற்கு முதலில், விரிப்பில் அமர்ந்து இரு கால்களையும் விரித்துக் கொள்ளுங்கள், பின் இரு கைகளையும் உங்களுக்கு இருபக்கமும் நீட்டிக் கொள்ளவும்.

கைகளை இரு கால்களுக்கு அடியில் அல்லது இடுப்பு மற்றும் தொடைக்கு பின் வைத்து அமர்ந்து கொள்ளுங்கள். பின்னர் தொடைகளை தரையில் அழுத்தி மார்பை உயர்த்த முயற்சிக்கவும்.

கால்களை முடிந்த வரை நீட்டி, ஆழமான சுவாசியுங்கள். இந்த போஸில் உங்களின் இரண்டு கால்கள் மற்றும் கைகள், கன்னம் மற்றும் மார்பு ஆகியவை தரையில் இருக்கும்.

பின்னர் 2 அல்லது 3 நிமிடங்கள் அதே நிலையில் மூச்சினை உள்ளிழுத்து சுவாசியுங்கள். பின்னர் நிதானமாக மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புங்கள். இவ்வாறு 3 முறை செய்ய வேண்டும்.

நன்மைகள்

நீரிழிவு நோயை நிர்வகிக்கவும், ஆஸ்துமாவின் அறிகுறிகளைக் குறைக்கவும் முடியும்.

உங்கள் உடலில் நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்துதவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

நோய் எதிர்ப்பு செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவும்.

உடலின் அனைத்து தசைகளையும் நீள்சியடையவும், செயல்படுத்தவும் உதவுகிறது

வயிறு வீக்கம், மலச்சிக்கல் மற்றும் பிற இரைப்பை மற்றும் குடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.

Tags:    

Similar News