உடற்பயிற்சி

தோள்கள், கைகள், முதுகுத்தண்டை வலிமையாக்கும் பூர்வோத்தனாசனம்

Published On 2023-01-18 04:32 GMT   |   Update On 2023-01-18 04:32 GMT
  • முதுகில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் செய்யக்கூடாது.
  • வயிற்றில் பிரச்சனை உள்ளவர்களும் செய்யக்கூடாது.

இந்த ஆசனத்தை செய்ய, மேலே உள்ள படத்தில் உள்ள படி காட்டியுள்ள படி தரையில் அமர்ந்து கால்களை முன்னோக்கி நீட்டியபடி உட்காரவும். இப்போது உங்கள் கைகளை இடுப்புக்கு பின்னால் தரையில் படும்படி தரையில் வைக்கவும். அதன் பிறகு உங்கள் கால்களால் உடலை மேல்நோக்கி உயர்த்தி, தலையை பின்னோக்கி நகர்த்த முயற்சிக்கவும். சாதாரணமாக புஷ்-அப் செய்யும் நிலைக்கு நேர் மாறாக நிலை இது.

இந்த நிலையில் 30 விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். இவ்வாறு 3 முறை செய்யவும்.

இந்த ஆசனம் செய்வதால் உங்கள் முதுகு, தோள்கள், கைகள், முதுகுத்தண்டு, மணிக்கட்டு மற்றும் தசைகளுக்கு மிகவும் நல்லது.

இந்த ஆசனம் உங்கள் மார்பு, தோள்கள், பைசெப்ஸ் மற்றும் உங்கள் கணுக்கால் முன்புறம் வரை நெகிழ்வடையச்செய்கிறது. இந்த ஆசனம் மனச்சோர்வுக்கு ஒரு நல்ல சிகிச்சையாகும், மேலும் இது உங்கள் மனதை அமைதிப்படுத்துகிறது.

இந்த ஆசனம் உங்கள் கைகள், மணிக்கட்டுகள், தொடை எலும்புகளை பலப்படுத்துகிறது.

Tags:    

Similar News