பொது மருத்துவம்

செப்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால்...

Published On 2023-03-29 01:30 GMT   |   Update On 2023-03-29 01:30 GMT
  • பிளாஸ்டிக் பொருட்களில் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள் சூழ்ந்திருக்கின்றன
  • செப்பு, நுண்ணிய ஊட்டச்சத்து கொண்டது.

நமது முன்னோர்கள் சமையலுக்கும், உணவு பொருட்களை சேமித்து வைப்பதற்கும் செப்பு பாத்திரங்களைதான் அதிக அளவில் பயன்படுத்தி வந்தார்கள்.

செப்பு பாத்திரங்களில்தான் தண்ணீரை சேமித்து பருகியும் வந்தார்கள். கால மாற்றமும், நாகரீக மோகமும் செப்பு பாத்திரங்களை புழக்கத்தில் இருந்து அப்புறப்படுத்திவிட்டன. அவற்றின் இடத்தை பிளாஸ்டிக் பொருட்கள் ஆக்கிரமித்துவிட்டன.

பிளாஸ்டிக் பொருட்களில் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள் சூழ்ந்திருக்கின்றன. அதுபற்றிய விழிப்புணர்வு பெருகி வருவதால் பெரும்பாலானோர் மீண்டும் செப்பு பாத்திரங்களை பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள். மேலை நாடுகளில் கூட செப்பு பாத்திரங்கள் புழக்கத்திற்கு வந்துவிட்டன. குடிநீர் பாட்டில்கள், சமையல் பாத்திரங்கள், உணவு பொருட்களை சேமிக்கும் பாத்திரங்கள் என செப்பு பாத்திரங்களின் விற்பனை அதிகரிக்க தொடங்கி உள்ளது.

செப்பு, நுண்ணிய ஊட்டச்சத்து கொண்டது. இது உடல் நலனுக்கு உதவுகிறது. நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துவதோடு செரிமானம் சீராக நடைபெறவும் துணைபுரியும். புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கும். ''செப்பு பாத்திரத்தில் சேமித்து வைக்கப்படும் நீரை குடித்தால் உடல் குளிர்ச்சி அடையும். உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி அமில, கார சமநிலையை பராமரிக்கும். உணவுகள், சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றை செப்பு பாத்திரங்களில் பாதுகாக்கலாம். மேலும் செப்பு பாத்திரத்தில் இரவில் நீரை ஊற்றி வைத்துவிட்டு காலையில் பருகுவது நல்லது'' என்கிறார், ஊட்டச்சத்தியல் நிபுணர் கவிதா தேவ்கன்.

அடிக்கடி காய்ச்சலுக்கு ஆளாகுபவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் செப்பு பாத்திரங்களை பயன்படுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். இது சிறந்த ஆக்சிஜனேற்றியாகவும் செயல்படும். உடலில் உள்ள நச்சு தன்மையை நீக்கும். உணவு பொருட்களில் பாக்டீரியாக்கள் பெருகுவதை தடுக்கும் ஆற்றலும் கொண்டது. பாக்டீரியாக்கள் மூலம் நோய் தொற்று ஏற்படாமலும் தடுக்கும்.

Tags:    

Similar News