பொது மருத்துவம்
மதியம் சாப்பிட்டதும் நடைப்பயிற்சி... எப்படி நடக்க வேண்டும்?
- உடலுக்கு அசவுகரியத்தை கொடுக்கும் விதமாக நடக்கவும் கூடாது.
- மதியம் சாப்பிட்ட பிறகு 10 நிமிடங்கள் நடப்பதை அன்றாட வழக்கமாக்கிக்கொள்வது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வித்திடும்.
மதியம் சாப்பிட்டதும் மேற்கொள்ளும் நடைப்பயிற்சி காலையில் மேற்கொள்ளும் நடைப்பயிற்சியை போன்று அமைந்துவிடக்கூடாது. ஒருபோதும் வேகமாக நடக்ககூடாது. இயல்பாக நடக்க வேண்டும். ஒவ்வொரு காலடியையும் வேகமாகவோ, அதிகமாகவோ எடுத்துவைக்கக்கூடாது.
உடலுக்கு அசவுகரியத்தை கொடுக்கும் விதமாக நடக்கவும் கூடாது. சுற்றுப்புற பகுதிகளை ரசித்தபடி மெதுவாக நடக்க வேண்டும். இயற்கை சூழ்ந்த இடங்கள், அருகில் உள்ள பூங்காவில் உலவலாம்.
மதியம் சாப்பிட்ட பிறகு 10 நிமிடங்கள் நடப்பதை அன்றாட வழக்கமாக்கிக்கொள்வது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வித்திடும். இந்த சிறிய பழக்கம் செரிமானம், ரத்த சர்க்கரை அளவு, இதய ஆரோக்கியம் உள்பட ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அளிக்கும்.