லைஃப்ஸ்டைல் (Health)

சுவையான சத்தான சிறுகீரை புலாவ்

Published On 2016-06-15 04:24 GMT   |   Update On 2016-06-15 04:24 GMT
கீரையில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. கீரையை வைத்து எப்படி புலாவ் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சிறுகீரை - 1 கட்டு,
ப.மிளகாய் - 4
உப்பு  -  தேவைக்கேற்ப,
மஞ்சள் தூள்,  -  1/4 டீஸ்பூன்,
பட்டை - லவங்கம்  -  2,
வெங்காயம் - 2
தக்காளி - 1
இஞ்சி, பூண்டு - 2 டீஸ்பூன்,
அரிசி - 11/2 ஆழாக்கு,
எலுமிச்சை சாறு -  2 ஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்,

செய்முறை :

* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

* குக்கரில் எண்ணெய் சூடேற்றி, பட்டை, லவங்கம் போட்டு தாளித்த பின் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, ப.மிளகாயை போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் கீரை சேர்த்து வதக்கி பின் உப்பு, மஞ்சள் சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

* அடுத்து அதில் அரிசியை போட்டு 3 கப் தண்ணீர் விட்டு குக்கரில் 3 விசில் வரும் வரை வேக விட்டு இறக்கவும்.

* விசில் போனதும் குக்கர் மூடியை திறந்து எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும்.

* சுவையான சத்தான கீரை புலாவ் ரெடி.

* எந்த கீரையிலும் இந்த புலாவை செய்யலாம். சுவையாக இருக்கும்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News