கர்நாடகா தேர்தல்

கர்நாடகாவில் மோடி பிரசாரம் எடுபடவில்லை- சித்தராமையா பேட்டி

Published On 2023-05-13 07:14 GMT   |   Update On 2023-05-13 07:14 GMT
  • மக்கள் விரோத செயலில் பா.ஜனதா ஈடுபட்டது.
  • காங்கிரஸ் 120 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றும்.

மைசூர்:

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா தேர்தல் வெற்றி குறித்து கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சி 120 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். இது ஆரம்ப கட்டம் தான். இன்னும் பல சுற்று வாக்குகள் எண்ண வேண்டும். எனவே காங்கிரஸ் 120 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றும்.

கர்நாடக மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பிரசாரம் எடுபடவில்லை. மோடியோ, அமித்ஷாவோ, ஜே.பி. நட்டாவோ கர்நாடகாவுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் வரட்டும் என்று நான் சொல்லிக் கொண்டு இருந்தேன். அவர்களது பிரசாரத்தால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.

ஏனென்றால் கர்நாடக மக்கள் பா.ஜனதாவின் ஊழல், தவறான நிர்வாகத்தால் அலுத்துவிட்டனர். மக்கள் விரோத செயலில் பா.ஜனதா ஈடுபட்டது.

பா.ஜனதா ஆட்சியில் எந்த வளர்ச்சி பணிகளும் இல்லாததால் மக்களும் அந்த கட்சியால் மகிழ்ச்சி அடையவில்லை. மக்கள் மாற்றத்தை விரும்பினர். அதற்கேற்ப தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

இவ்வாறு சித்தராமையா கூறியுள்ளார்.

முத்-மந்திரி பதவிக்கு சித்தராமையாவுக்கும், மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமாருக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

Tags:    

Similar News