செய்திகள் (Tamil News)

பொருளாளர் பதவி குறித்து ஓ.பி.எஸ். தொடர்ந்த வழக்கை சட்டப்படி சந்திப்பேன்: திண்டுக்கல் சீனிவாசன்

Published On 2017-05-21 10:04 GMT   |   Update On 2017-05-21 10:04 GMT
கட்சி பணத்தை செல்வு செய்வதாக கூறுவது தவறு. பொருளாளர் பதவி குறித்து ஓ.பி.எஸ். தொடர்ந்த வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

கொடைக்கானல்:

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கொடைக்கானலில் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் விரைவில் சட்டசபை கூடும். அப்போது எங்கள் பலத்தை நாங்கள் நிரூபிப்போம். கட்சி பணத்தை செலவு செய்வதாக ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் கூறுகின்றனர்.

நான் ஓ.பன்னீர் செல்வத்துக்கு முன்னதாகவே 7 ஆண்டுகள் கட்சி பொருளாளராக இருந்துள்ளேன். கட்சி நிதியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது அவருக்கும் தெரியும், எனக்கும் தெரியும். கட்சி நிதியை முறைகேடாக யாரும் கையாள முடியாது.

நான் சட்ட விதிகளுக்கு உட்பட்டே நடந்து வருகிறேன். பொருளாளராக என்னை நியமித்தது குறித்து ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை கட்சியின் அறிவுரைப்படி சட்டப்படி சந்திப்பேன்.


அ.தி.மு.க. இனி இரு அணிகளும் இணைவதற்கு நான் ஒரு போதும் தடையாக இருந்தது கிடையாது. எந்த மேடையிலும் எந்த பத்திரிகை பேட்டியிலும் இது வரை நான் அந்த அணியினரை விமர்சித்தது இல்லை. பின் எப்படி அணிகள் இணைய நான் முட்டுக்கட்டையாக இருப்பேன். இரு அணிகள் இணைவதே எனது முழு விருப்பம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News