செய்திகள்

தமிழக சட்டசபையில் வாடகைதாரர் உரிமைச் சட்ட மசோதா நிறைவேற்றம்

Published On 2018-07-09 10:03 GMT   |   Update On 2018-07-09 10:03 GMT
தமிழக சட்டசபையில் இன்று சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்கள் உரிமைச் சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை:

தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரில் இன்று, சொத்து உரிமையாளர்கள், வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்பை முறைப்படுத்த வகை செய்யும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் தங்கள் தரப்பு கருத்துக்களையும் பரிந்துரைகளையும் முன்வைத்தனர்.

அப்போது புதிய சட்ட மசோதாவில் உள்ள அம்சங்கள், சொத்து உரிமையாளர்களுக்கு ஆதரவாகவும், வாடகைதாரர்களுக்கு எதிராகவும் உள்ளதாக தி.மு.க. எம்எல்ஏ ரகுபதி தெரிவித்தார்.  மேலும், இந்த மசோதாவை சட்டமன்ற தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஆனால் தி.மு.க.வின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. விவாதத்தின் முடிவில், குரல் வாக்கெடுப்பு மூலம், இந்த சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது. இதேபோல், வனச் சட்டத்திருத்த மசோதா  உள்ளிட்ட மேலும் சில  மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. #TenantsBill
Tags:    

Similar News