உள்ளூர் செய்திகள்

கபிலர்மலை விவசாயிகளுக்கு வழங்க 11,000 மரக்கன்றுகள் தயார்

Published On 2022-11-22 07:52 GMT   |   Update On 2022-11-22 07:52 GMT
  • பசுமைப்போர்வை இயக்கத்தின் கீழ், நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு மரக்கன்று வழங்க தயார் நிலையில் உள்ளன.
  • கபிலர்மலை வட்டார வேளாண்மை அலுவலகத்திற்கு நேரில் வந்து மரக்கன்றுகளை பெற்று பயனடையலாம்.

பரமத்திவேலூர்:

தமிழ்நாடு அரசின் நீடித்த நிலையான பசுமைப்போர்வை இயக்கத்தின் கீழ், நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு 1000 செம்மரக்கன்றுகளும், 2500 ரோஸ்வூட் மரக்கன்றுகளும், 7000 மகோகனி மரக்கன்றுகளும், 100 வேங்கை மரக்கன்றுகளும், 400 தேக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட தயார் நிலையில் உள்ளன.

மரக்கன்றுகள் பயிர் செய்ய விரும்பும் கபிலர்மலை வட்டார விவசாயிகள், இன்று மாலைக்குள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து கொண்டு, கபிலர்மலை வட்டார வேளாண்மை அலுவலகத்திற்கு நேரில் வந்து மரக்கன்றுகளை பெற்று பயனடையலாம் என கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News