உள்ளூர் செய்திகள்

கைதான வாலிபரையும் அவரை பிடித்த போலீசாரையும் படத்தில் காணலாம்.

திட்டக்குடி அருகே 120 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல்

Published On 2023-04-02 07:40 GMT   |   Update On 2023-04-02 07:40 GMT
  • திட்டக்குடி அருகே 120 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
  • போலீசாரை பார்த்ததும் இருசக்கர வாகனத்தை அப்படியே விட்டுவிட்டு தப்பி ஓட்டம் பிடித்தார்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கொரக்கவாடி கிராமம் அருகில் கோ.குடிகாடு பகுதியில் சேலம் மாவட்டத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த மர்ம நபர் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரை பார்த்ததும் இருசக்கர வாகனத்தை அப்படியே விட்டுவிட்டு தப்பி ஓட்டம் பிடித்தார்.அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் துரத்தி பிடிக்கும் முயற்சி செய்யும்போது கீழே தள்ளிவிட்டு மீண்டும் ஓட்ட பிடித்தார். ஆனால் போலீசார் லேசான காயத்துடன் விடாமல் துரத்தி பிடித்து விசாரணை செய்தனர்.

அப்போது 4லாரி டியூப்களில் 120 லிட்டர் கள்ளச்சாராயம் இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்தனர். அவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த இராமசேசபுரம் பகுதியைச் சேர்ந்த அருள் (34) என்பது தெரிய வந்தது. அவரை ராமநத்தம் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து இருசக்கர வாகனம் மற்றும் 120 லிட்டர் கள்ள சாராயத்தை பறிமுதல் செய்தனர். வாலிபர் அருளை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் துரத்தி பிடித்ததில் ராமநத்தம் சப்-இன்ஸ்கபெக்டர் கலியமூர்த்தி, போலீசார் ஆனந்த ரட்சகன், ஜெயபிரகாஷ் ஆகிய3 போலீசாருக்கு சிறு காயம் ஏற்பட்டது. அவர் கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News