முக்கூடல் அருகே கோவில் கொடை விழாவில் 3 பெண்களிடம் 17 பவுன் நகை பறிப்பு
- கோவில் திருவிழாவையொட்டி நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.
- கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் 3 பெண்களிடமும் இருந்து சுமார் 17 பவுன் நகையை திருடிச்சென்றுள்ளனர்.
நெல்லை:
முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடியில் திரிகடுகை முன்றீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 27-ந்தேதி நடைபெற்றது.
நகை மாயம்
கோவில் திருவிழாவையொட்டி நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் வானியர் மேட்டு தெருவை சேர்ந்த செண்டு(வயது 57) என்ற மூதாட்டி கோவிலில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்தார்.
அப்போது அவரது கழுத்தில் கிடந்த 65 கிராம் தங்கநகையை காணவில்லை. இதேபோல் கோவிலுக்கு வந்திருந்த முத்துலெட்சுமி என்பவரிடம் 40 கிராம் நகையும், சந்தானலெட்சுமி என்பவரிடம் 32 கிராம் நகையும் மாயமானது. கூட்ட ெநரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் 3 பெண்களிடமும் இருந்து சுமார் 17 பவுன் நகையை திருடிச்சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.6லட்சம் ஆகும். இதுதொடர்பாக அவர்கள் அளித்த புகாரின்பேரில் பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.