- கொடிசியா ரோட்டில் சந்தேகம்படும் படி நின்றிருநத வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
- 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.
கோவை
கோவை பீளமேடு போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொடிசியா ரோட்டில் சந்தேகம்படும் படி நின்றிருநத வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருப்பூர் சாமூண்டிபுரம் காந்திநகரை சேர்ந்த கோபி(25) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதேபோல், பீளமேடு போலீசார் விமான நிலையம் பூங்கா நகர் ரோட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருப்பூர் சாமூண்டிபுரம் ராஜீவ் நகரை சேர்ந்த அருண்குமார்(25), நரேந்திரன்(22), திருப்பூர் சோழியம்பாளையத்தை சேர்ந்த பவிஷ்நாத்(22) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இவர்களின் கூட்டாளி திருப்பூர் சபி முகமத் என்பவரை தேடி வருகின்றனர்.