உள்ளூர் செய்திகள் (District)

சின்னசேலம் அருகே மூதாட்டி வீட்டில் திருடிய 2 பேர் கைது: ஜெயிலில் திட்டம் தீட்டியது அம்பலம்

Published On 2023-07-29 10:03 GMT   |   Update On 2023-07-29 10:03 GMT
  • கிரைம் போலீஸ் ஆனந்தராஜ் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
  • இவர் கடலூர் மத்திய சிறையில் இருந்தபோது, திருட ஜெயிலில் திட்டம் போடப்பட்டது.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இன்ஸ்பெக்டர் ராஜாராமன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக், கிரைம் போலீஸ் ஆனந்தராஜ் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாரை கண்ட ஒரு நபர் பயந்தபடி வேகமாக நடந்தார். சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், நைனார்பாளையத்தை சேர்ந்த சின்னையன் (வயது 40) என்பதும், இவர் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர். இவர் கடலூர் மத்திய சிறையில் இருந்தபோது, சின்னசேலம் அடுத்த பூண்டியை சேர்ந்த சின்னதுரை (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் கொடுத்த தகவலின் பேரில் பூண்டியில் உள்ள ஒரு வீட்டில் திருட ஜெயிலில் திட்டம் போடப்பட்டது.

இருவரும் ஜாமீனில் வெளிவந்த பிறகு பூண்டியில் உள்ள நல்லம்மாள் (65) என்பவரது வீட்டில் திருடியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சின்னையனை கைது செய்த போலீசார், அவர் கொடுத்த தகவலின்படி பூண்டி கிராமத்திற்கு சென்ற சின்னதுரையை கைது செய்தனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு நல்லம்மாள் வீட்டில் நடந்த திருட்டு வழக்கில் 5 பவுன் நகையும், ரூ.1 லட்சம் திருடு போனதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், அங்கிருந்து ஒரு பவுன் நகையும், ரூ.21 ஆயிரம் பணமும் திருடியதாக சின்னையனும், சின்னதுரையும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனையடுத்து சின்னசேலம் போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News