தமிழ்நாடு
கோவையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும்- கலெக்டர் அறிவிப்பு
- வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
- கோவையில் நேற்று நள்ளிரவு வரை கனமழை வெளுத்து வாங்கியது.
கோவை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குகிறது.
வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
கோவை மாவட்ட பகுதியில் கடந்த ஒருவாரமாக மாலை மற்றும் இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் இரவில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கோவையில் நேற்று நள்ளிரவு வரை கனமழை வெளுத்து வாங்கியது.
கோவை பகுதியில் இரவில் மழை பெய்த நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும் என கலெக்டர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார்.