செய்திகள் (Tamil News)

மினிபஸ் கவிழ்ந்து 2 பேர் பலியான வழக்கில் டிரைவருக்கு 2 ஆண்டு ஜெயில்

Published On 2016-10-08 09:22 GMT   |   Update On 2016-10-08 09:22 GMT
மினிபஸ் கவிழ்ந்து 2 பேர் பலியான வழக்கில் டிரைவருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை அளித்து திருவையாறு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
திருவையாறு:

தஞ்சை கீழவாசலை சேர்ந்த அமர்நாதன் மகன் சரவணன்(28) இவர் தஞ்சாவூரிலிருந்து பனவெளி செல்லும் மினிபஸ்சில் டிரைவராக பணிபுரிந்துவந்தார்.

கடந்த 16.8.2008 அன்று மினி பஸ்சை பனவெளியிலிருந்து ஓட்டிகொண்டு பள்ளியக்கரஹாரம் வெண்ணாற்றங்கரை வரும்போது ராஜேந்திரம் ஆற்காடு பஸ்நிறுத்தம் அருகே மினி பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது.

இதில் பஸ்சில் பயணம் செய்த தென்பெரம்பூரை சேர்ந்த வீரையன் மனைவி கனகவள்ளி(55), வாண்டையார் இருப்பை சேர்ந்த பாக்கியராஜ் ஆறுமாத பெண் குழந்தை ஆகியோர் ஆற்றில் மூழ்கி இறந்தனர். மேலும் பஸ்சில் பயணம் செய்த 33 பேருக்கு காயம் ஏற்பட்டு தஞ்சையில் சிகிச்சை பெற்றனர்.

இதுசம்மந்தமாக நடுக்காவேரி போலீசார் டிரைவர் சரவணன் மீது வழக்குப்பதிவு செய்து அந்தவழக்கு திருவையாறு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. நீதிபதி சோமசுந்தரம் வழக்கை விசாரித்து டிரைவர் சரவணனுக்கு தலா 2 வருட சிறைதண்டனையும், மேலும் 33 பேர் காயமடைந்ததற்காக 33 வாரம் சிறை தண்டனையும் மற்றும் ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Similar News