செய்திகள் (Tamil News)

மு.க.ஸ்டாலின் இன்று கோவை வருகை: வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்

Published On 2017-01-25 10:30 GMT   |   Update On 2017-01-25 10:30 GMT
தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று கோவை வருகிறார்.

கோவை:

தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று கோவை வருகிறார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அதன்பிறகு மாலை 6 மணிக்கு சிவானந்தா காலனியில் தி.மு.க. சார்பில் நடைபெறும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.

மேலும், பீளமேடு சித்ரா கார்னரில் தி.மு.க. பிரமுகரும், தொழில் அதிபருமான டி.ஆர்.சண்முக சுந்தரம் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. வரவேற்பு உள்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் தி.மு.க.வினர் திரளாக கலந்து கொள்ளுமாறு கோவை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் ஆ.நாச்சி முத்து, மு.முத்துசாமி, இரா. தமிழ்மணி, சி.ஆர்.ராமச் சந்திரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

பொதுக்கூட்டம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் இரவு 11 மணிக்கு விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

Similar News