செய்திகள் (Tamil News)

வேலூரில் சத்துணவு ஊழியர்கள் 2-வது நாளாக மறியல்: 240 பேர் கைது

Published On 2017-03-22 10:24 GMT   |   Update On 2017-03-22 10:24 GMT
வேலூரில் 2-வது நாளாக மறியல் செய்த 240-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
வேலூர்:

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம், குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சத்துணவு ஊழியர்கள் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

இந்த நிலையில் அறிவித்த படி, சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே 2-வது நாளாக இன்றும் மறியல் போராட்டம் நடந்தது. 240-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Similar News