செய்திகள் (Tamil News)

கொதிகலனில் இருந்து அலுமினிய கலவை கொட்டியதால் தொழிலாளி பலி

Published On 2017-05-11 09:49 GMT   |   Update On 2017-05-11 09:49 GMT
கும்மிடிப்பூண்டியில் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலையில் உள்ள கொதிகலனில் அலுமினிய கலவை கொட்டியதில் தொழிலாளி ஒருவர் பலியானார். மற்றோருவருக்கு தீவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமாக அலுமினிய பார் கட்டிகள் உற்பத்தி செய்யும் தொழிற் சாலை உள்ளது. இங்கு உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரிஜோஸ் (32) சுதர்சன்(22) ஆகியோர் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.

நேற்று மாலை தொழிற்சாலையில் உள்ள கொதிகலனில் அலுமினிய குழம்பு திடீரென அதிக அழுத்தத்தில் வெளியே சிதறியது.

இதில் அருகே வேலை செய்து கொண்டிருந்த பிரிஜோஸ், சுதர்சன் மீது அலுமினிய குழம்பு கொட்டியது.

இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் 2 பேரையும் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலன் இன்றி பிரிஜோஸ் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். சுதர்சனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து கும்மிடிப் பூண்டி சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News