செய்திகள் (Tamil News)

தண்டராம்பட்டு பகுதியில் கடும் வறட்சி: தென்னை மரங்கள் காய்ந்து வரும் பரிதாபம்

Published On 2017-05-11 13:34 GMT   |   Update On 2017-05-11 13:34 GMT
திருவண்ணாமலை மாவட்டத்தில் பருவமழை பொய்த்து போனதை தொடர்ந்து அப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் தென்னை மரங்கள் காய்ந்து வருகின்றது.
தண்டராம்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டத்தில் பருவமழை பொய்த்து போனதால் ஏரி, கிணறுகள் வறண்டு போய் கிடக்கிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து போனது. இதன் காரணமாக விவசாயம் செய்த கரும்பு, நெல், மக்காச்சோளம், எள், கேழ்வரகு, மணிலா, உள்ளிட்ட பயிர்கள் காய்ந்து போனது.

இதனால் விவசாயிகள் கடும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில் குடி நீருக்காக தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறுகள், மற்றும் குடி நீர் கிணறுகள் உள்ளிட்டவைகளில் உள்ள நீர்மட்டம் குறைந்து குடி நீருக்கும் பொதுமக்கள் அன்றாடம் போரட்டத்தை சந்தித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

குடிநீருக்காக பொதுமக்கள் விவசாய நிலங்களை தேடி பல கிலோமீட்டர் தூரம் சென்று குடி நீர் எடுத்து வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அடுத்த வாணாபுரம் அதனை சுற்றி யுள்ள கிராமமான வரகூர், நாசானந்தல், குங்கிலிய நத்தம், பேராயாம்பட்டு உள்ளிட்ட பகுதியில் கடும் வறட்சியின் காரணமாக தென்னை மரங்கள் காய்ந்து வருகின்றது. இதனால் விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர்.

Similar News