செய்திகள்

வன சரணாலயம் அமைக்க எதிர்ப்பு - கொடைக்கானல் கிராம மக்கள் கருப்பு கொடி கட்டி போராட்டம்

Published On 2018-05-16 10:48 GMT   |   Update On 2018-05-16 10:48 GMT
வனச்சரணாலயம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கொடைக்கானல் கிராம மக்கள் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தினர்.
பெருமாள்மலை:

கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வனச்சரணாலயம் அமைக்க எதிர்ப்பு உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விடுகளில் கருப்பு கொடி கட்டி தொடர் போராட்டம நடத்தி வருகின்றனர்.

கருப்பு கொடி மற்றும் எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியபடி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இது குறித்து மன்னவனூர் பகுதி பொதுமக்கள் கூறுகையில், கொடைக்கானலை வனச்சரணாலயமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனை திரும்ப பெற வேண்டும். பழம்புத்தூர், புது புத்தூர், கூக்கால், மன்னவனூர், கூம்பூர், கீழானவயல் உள்ளிட்ட மேல்மலை கிராம வனப்பகுதிகளை ஆனைமலை புலிகள் காப்பகத்தோடு இணைக்க வனத்துறை முயற்சித்து வருகிறது. இதனை கைவிட வேண்டும்.

மேல்மலை கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலங்களை வனத்துறையிடம் ஒப்படைத்து விவசாயத்தை அழிக்க நினைக்கும் வருவாய்த்துறையினர் தங்கள் முயற்சியை கைவிட வேண்டும். பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வருபவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை தொடங்கியுள்ளோம்.

எங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் அனைத்து வீடுகளிலும் தொடர்ந்து கருப்பு கொடி கட்டி போராட முடிவு செய்துள்ளோம் என்றனர். மன்னவனூர் பகுதியைத் தொடர்ந்து கவுஞ்சியிலும் இன்று பொதுமக்கள் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொடைக்கானலை வனச்சரணாலயமாக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷமிட்டனர். தொடர் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News