செய்திகள்

கோவையில் ரூ.83 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் - குடோன் அமைத்து அச்சடிப்பு

Published On 2018-06-02 03:09 GMT   |   Update On 2018-06-02 03:09 GMT
கோவை மாவட்டம் கோவில்மேடு பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் 83 லட்ச ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகளுடன் போலீசாரிடம் இன்று பிடிபட்டார். #fakecurrency
கோவை:

தமிழகத்தின் முக்கிய பெருநகரங்களில் கள்ளநோட்டுகளின் உபயோகம் அதிகரித்து வருகிறது. இன்று கோவை மாவட்டம் மேலாண்டிபாளையத்தில் போலீசார் வழக்கம்போல் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியே வந்த கோவில்மேடு பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரை சோதனை செய்தபோது அவரிடம் கட்டுகட்டாக கள்ளநோட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் ஆனந்தனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

மேலும், ஆனந்தன் அளித்த தகவலின் அடிப்படையில் கள்ளநோட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்த குடோனில் போலீசார் சோதனை செய்துள்ளனர். இதுதொடர்பாக மேலும் 2 நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிடிபட்ட கள்ளநோட்டுகளின் மதிப்பு 83 லட்ச ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு நாடு முழுவதும் கள்ளநோட்டுகளின் தயாரிப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #fakecurrency

Tags:    

Similar News