செய்திகள்

கணவாயில் லாரி மீது கார் மோதி பாணிபூரி கடை உரிமையாளர் பலி- 5 குழந்தைகள் உள்பட 8 பேர் படுகாயம்

Published On 2018-07-12 14:09 GMT   |   Update On 2018-07-12 14:09 GMT
தொப்பூர் கணவாயில் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் பாணிபூரி கடை உரிமையாளர் பலியானார். மேலும் 5 குழந்தைகள் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
சேலம்:

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நைனாப்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் தமிழ்செல்வன் (வயது 28).

நாமக்கல்லில் பாணி பூரி கடை நடத்தி வந்த இவர் நேற்று தனது உறவினர்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 8 பேருடன் நாமக்கல்லுக்கு ஒரு காரில் புறப்பட்டார்.

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் கார் வந்த போது சாலையோரம் நிறுத்தியிருந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன் பகுதி நொறுங்கியதால் இடிபாடுகளுக்குள் சிக்கி காருக்குள் இருந்தவர்கள் அலறினர்.

தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதில் தமிழ்செல்வன் வரும் வழியிலேயே இறந்து விட்டார். அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

படுகாயம் அடைந்த தமிழ்செல்வனின் உறவினரான சோமு (22), தேவி , சுகன்யா ஆகியோர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். காரில் இருந்த 5 குழந்தைகள் லேசான காயத்துடன் தப்பினர்.

இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து குறித்து அவர்களது உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. #tamilnews
Tags:    

Similar News