செய்திகள்
பெண் வேடமிட்டு குழந்தையை கடத்த முயற்சி? போலீசார் தீவிர விசாரணை
மேலூர் அருகே பெண் வேடமிட்டு குழந்தையை கடத்த முயற்சி செய்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது பதினெட்டாங்குடி கிராமம். இங்கு இன்று காலை நைட்டி அணிந்த 2 பேர் சுற்றி திரிந்தனர். பார்ப்பதற்கு மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போல் காணப்பட்டனர்.
ஊரில் உள்ள மந்தை பகுதியில் அதே பகுதியை சேர்ந்த குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அங்கு சென்ற 2 பேரும் யாரும் இல்லாத நேரத்தில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவனிடம் ஆசைவார்த்தை கூறி பிஸ்கட் கொடுத்ததாக தெரிகிறது. சிறிது நேரத்தில் 2 பேரும் அந்த குழந்தையை அழைத்துச் செல்ல முயன்றனர்.
இதை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் சிலர் சந்தேகப்பட்டு உடனே அவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது 2 பேரில் ஒருவன் தப்பி விட்டான். மற்றொருவனை பிடித்த இளைஞர்கள், மேலூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.அங்கு போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
இதையடுத்து போலீசார் அவரை மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தலைமை மருத்துவர் ஜெயந்தி, மருத்துவர் ஜெயந்த் ஆகியோர் அந்த நபரை பரிசோதனை செய்தனர். பிடிபட்ட நபர் உண்மையில் குழந்தை கடத்தும் கும்பலை சேர்ந்தவரா? அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews