செய்திகள்

பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்கள் திருட்டு - கமிஷனர் அலுவலகத்தில் அதிகாரிகள் புகார்

Published On 2018-07-26 08:46 GMT   |   Update On 2018-07-26 08:46 GMT
பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்கள் தனியார் நிறுவனங்களுக்கு சென்றது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். #StudentsDatabaseLeaked
சென்னை:

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களின் விவரத் தொகுப்பு தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கும் நுழைவுத்தேர்வு பயிற்சி மையங்களுக்கும் விற்பனை செய்யப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகளை அனுப்பி வைப்பதற்காக, மாணவர்களிடமிருந்து செல்போன் எண்கள் பெறப்படுகின்றன. தனியார் நிறுவனத்தின் உதவியுடன் தேர்வு முடிவுகள் அனுப்பப்படுவதால், அந்த நிறுவனங்கள் மூலமாக மாணவர்களின் விவரங்கள் விற்பனைக்கு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், பள்ளிக்கல்வி தேர்வுத்துறை உயரதிகாரிகள் இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்கள் தனியார் நிறுவனங்களுக்கும், இணையதளங்களுக்கும் சென்றது குறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் புகார் அளித்தனர். இது தொடர்பாக விரைவில் விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #StudentsDatabaseLeaked

Tags:    

Similar News