செய்திகள்

ராஜபாளையம் அருகே கார் விபத்தில் சிவகாசி அச்சக மேலாளர் பலி

Published On 2018-07-26 10:01 GMT   |   Update On 2018-07-26 10:01 GMT
ராஜபாளையம் அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் அச்சக மேலாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ராஜபாளையம்:

சிவகாசி முனீசுவரன் காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 29). ஆப்செட் பிரிண்டிங் அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார்.

அதே அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் செல்வம் (26), சாரதா நகர் காளிமுத்து (30), என்.ஜி.ஓ. காலனி விக்னேஷ் (25). இவர்கள் 4 பேரும் குற்றாலம் செல்ல திட்டமிட்டனர்.

நேற்று முன்தினம் அவர்கள் காரில் குற்றாலம் புறப்பட்டனர். விக்னேஷ் காரை ஓட்டினார்.

குற்றாலத்தில் ஆனந்தமாக குளித்த அவர்கள் நேற்று அதிகாலை அங்கிருந்து புறப்பட்டனர். தளவாய்புரம் விலக்கு அருகே கார் வந்தபோது, திடீரென தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ரமேஷ் உள்பட 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். சேத்தூர் புறக்காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முருகேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் ரமேசின் நிலை மோசமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று ரமேஷ் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News