காடையாம்பட்டி அருகே மரத்தில் தூக்குபோட்டு தொழிலாளி தற்கொலை
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டியை அடுத்த அக்ரஹாரம் பகுதியில் நூறு ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரி முழுவதும் கருவேலை மரம் நிறைந்துள்ளது. இந்த மரங்களை ஓமலூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் டெண்டர் எடுத்து ஊட்டி பகுதியை சேர்ந்த நபருக்கு மொத்தமாக விற்பனை செய்தாக கூறப்படுகிறது.
இந்த மரங்களை வெட்ட 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஏரி பகுதியில் குடிசை அமைத்து தங்கி வருகின்றனர். இவர்கள் மேச்சேரி, கொளத்தூர், கருகல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள். லாரிகள் வேலை நிறுத்தம் நடந்ததால் சில நாட்களாக மரம் வெட்டும் வேலை நிறுத்தபட்டது. மரம் வேலை தொடங்க நேற்று மாலை கருங்கல்லூர் பகுதியை சேர்ந்த மாது (60) என்பவர் அக்ரஹார ஏரிக்கு வந்ததாக கூறப்படுகிறது.
மாது மட்டும் தனியாக இரவில் ஏரிபகுதியில் இருந்தாக கூறப்படுகிறது. இன்று காலை வழக்கம் போல் மரம் வெட்ட மற்றவர்கள் ஏரிக்கு சென்றார். அப்போது மாது வெள்ளை துணியில் மரத்தில் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தீவட்டிபட்டி போலீசில் புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவருக்கு அம்மாசி என்ற மனைவியும், சாமி என்ற மகன் உள்ளார். சாமி தீயனைப்புதுறையில் பணியாற்றி வருகிறார்.