செய்திகள்

பாளை கோவில் கொடை விழாவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய 10 பேர் மீது வழக்கு

Published On 2018-07-30 10:36 GMT   |   Update On 2018-07-30 10:36 GMT
பாளை குலவணிகர்புரத்தில் உள்ள கோவில் கொடை விழாவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நெல்லை:

பாளை குலவணிகர்புரத்தில் உள்ள முப்புடாதி அம்மன் கோவில் கொடைவிழா நேற்று இரவு நடந்தது. விழாவில் பாட்டுக்கச்சேரி நடந்தது. அப்போது ஒரு சமுதாய பாடலை பாடினார்கள்.

இதைத்தொடர்ந்து விழா பாதுகாப்புக்கு நின்ற மேலப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் சமுதாய பாடல்களை பாட வேண்டாம் என்று கூறியுள்ளார். அப்போது விழா நடத்தும் குழுவினர்கள் போலீசாரை அவதூறாக பேசி மிரட்டி உள்ளனர்.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தார். மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி கோவில் விழா நடத்திய சுப்பிரமணியன், நல்லக்கண்ணு, முருகன், பால்ராஜ், பாலகிருஷ்ணன், நவநீத கிருஷ்ணன், சங்கர பெருமாள் உள்பட 10 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று கோவில் விழாவிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #tamilnews
Tags:    

Similar News