செய்திகள்

வெங்கல் அருகே ஆக்கிரமித்து கட்டிய 20 வீடுகள் இடிப்பு

Published On 2018-08-17 07:02 GMT   |   Update On 2018-08-17 07:02 GMT
வெங்கல் அருகே ஆக்கிரமித்து கட்டிய 20 வீடுகளை ஆய்வு செய்து பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.

பெரியபாளையம்:

வெங்கல் அருகே உள்ள அமணம் பாக்கம் கிராமத்தில் திருவள்ளூர் - செங்குன்றம் நெடுஞ்சாலையில் நீர்நிலை புறம்போக்கு வரவு கால்வாய் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து சிலர் குடிசை வீடுகளை கட்டி குடியிருந்தனர்.

இதேபகுதியில் உள்ள சென்னை குடிநீர் வடிகால் வாரியத்துக்கு சொந்தமான 20 சென்ட் இடத்திலும் குடிசை வீடுகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதுபற்றி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லிக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதையடுத்து அவர் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

கலெக்டரின் உத்தரவின் படி திருவள்ளூர் தாசில்தார் தமிழ்செல்வன் மேற் பார்வையில் வருவாய்த்துறை அதிகாரிகள் அப்பகுதியில் இருந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அதிரடியாக அகற்றி அரசு நிலத்தை மீட்டனர்.

மீட்கப்பட்ட நிலத்தின்மொத்த மதிப்பு ரூ.11 கோடியே 20 லட்சம் ஆகும். ஆக்கிரமிப்பு அகற்றியபோது வீடு இழந்த அனைவருக்கும் இரண்டு சென்ட் வீதம் மாற்று இடம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News