செய்திகள்

திருப்பூரில் தகராறை விலக்க சென்ற முதியவர் கொலை

Published On 2018-08-19 11:22 GMT   |   Update On 2018-08-19 11:22 GMT
திருப்பூரில் தகராறை விலக்க சென்ற முதியவர் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்:

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிஷ்ணுகுமார். இவரது மனைவி பூஜா. இவர்கள் திருப்பூர் கொடி கம்பம் பகுதியில் தங்கி இருந்து அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர்.

நேற்று இரவு பிஷ்ணு குமார் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். அப்போது கணவன் -மனைவிக்கு இடையே தகராறு உருவானது. பிஷ்ணுகுமார் மனைவியை அடித்து உதைத்தார்.

இதனால் பூஜா வெளியே ஓடி வந்து சத்தம் போட்டார். இதனை கேட்டதும் அப்பகுதியில் வசிக்கும் முதியவர் அழகேஷ் (62) அங்கு வந்தார்.

அவர் பிஷ்ணு குமாரிடம் சென்று சமாதானம் செய்தார். அப்போது அவர்களுக்குள் தகராறு உருவானது.

இதில் ஆத்திரம் அடைந்த பிஷ்ணு குமார் முதியவர் அழகேசை தள்ளி விட்டார்.

இதில் அவரது பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சம்பவ இடத்திலே பலியானார். இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசரர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரை கொன்ற பிஷ்ணு குமாரை கைது செய்தனர்.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தகராறை விலக்க சென்ற முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News