செய்திகள்
ஆனையூரில் பெண் தபால் ஊழியர் வீட்டில் 5 பவுன் நகை கொள்ளை
பெண் தபால் ஊழியர் வீட்டில் 5 பவுன் நகை மற்றும் கை கடிகாரம் கொள்ளை போனதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
மதுரை:
ஆனையூர் ஆபீசர்ஸ் டவுன் காலனியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சுபாவேணி (வயது34). பீ.பி. குளம் தலைமை தபால் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக உள்ளார்.
சம்பவத்தன்று இரவு சுபாவேணி குடும்பத்தினருடன் வீட்டில் உறங்கி கொண்டு இருந்தார். அப்போது யாரோ மர்ம மனிதர்கள் முன்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர்.
அவர்கள் வீட்டில் இருந்த 4 பவுன் பிரேஸ்லெட், ஒரு பவுன் கம்மல் மற்றும் கை கடிகாரத்தை திருடிச்சென்று விட்டனர்.
இதுகுறித்து கூடல்புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.