செய்திகள்

தமிழ்நாட்டில் மேலும் 11 இடங்களில் அவசர சிகிச்சை மையங்கள் - அமைச்சர் விஜயபாஸ்கர்

Published On 2018-09-29 08:43 GMT   |   Update On 2018-09-29 08:43 GMT
தமிழ்நாட்டில் மேலும் 11 இடங்களில் அவசர சிகிச்சை மையங்கள் விரைவில் அமைக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். #MinisterVijayabaskar
சென்னை:

மாமல்லபுரம் அரசு அரசு மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்டுள்ள 24 மணிநேர அவசர சிகிச்சை மையத்தினை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் திறந்து வைத்து பேசியதாவது:-

இன்று தொடங்கப்பட்டுள்ளதை போன்ற அவசர சிகிச்சை மையங்கள் வெளிநாடுகளில் மட்டுமே காண முடிந்தது. ஆனால் தற்போது உலகத்தரம் வாய்ந்த அவசர சிகிச்சை மையங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற மையங்கள் மேலும் ஸ்ரீபெரும்புதுர், மாதனூர், சூளகிரி, காரிய மங்கலம், ஆசனூர், தாராபுரம், திருச்செங்கோடு, காரமடை, நாங்குநேரி, ஆலங்குளம் மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய 11 இடங்களில் விரைவில் அமைக்கப்படும்.



தமிழகத்தில் சாலை விபத்துக்களால் ஏற்படும் இறப்பை குறைக்க தமிழக அரசு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முன்னெடுப்பு திட்டத்தை ரூ.57 கோடி செலவில் அறிமுகப்படுத்த உள்ளது.

மருத்துவமனை முன் கவனிப்பு, மருத்துவமனை கவனிப்பு, மருத்துவமனை புனர்வாழ்வு போன்ற மூன்று அம்சங்களும் ஒருங்கிணைக்கப்படும். மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.

மேலும், 24 கோடி ரூபாய் செலவில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் பொன்னேரி மற்றும் நசரத்பேட்டையில் நிறுவப்படும் என்றார். #MinisterVijayabaskar

Tags:    

Similar News