செய்திகள்

திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் மணல் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது

Published On 2018-10-01 08:37 GMT   |   Update On 2018-10-01 08:37 GMT
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மணல் லாரிகள் உரிமையாளர் சங்கத்தினர் அறித்தபடி இன்று முதல் வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.
செங்குன்றம்:

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மணல் லாரிகள் உரிமையாளர் சங்கத்தினர் இன்று முதல் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் மணல் குவாரி திறக்க வேண்டும். ஆந்திராவில் இருந்து கொண்டு வரும் மணலை பறிமுதல் செய்யக் கூடாது, டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

இதையடுத்து பாடியநல்லூர் அங்காள பரமேஸ்வரி கோவில் வளாகத்தில் மணல் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த வேலை நிறுத்தம் காரணமாக ஆயிரம் மணல் லாரிகள் இயங்கவில்லை. இந்த தொழிலை நம்பி பிழைப்பு நடத்தும் 10 ஆயிரம் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News