செய்திகள்
சென்னைக்கு கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு கிளிகள் பறிமுதல்
சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 70 அபூர்வ கிளிகள் மற்றும் அபூர்வ குரங்கு ஒன்றையும் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #ForeignParrot
சென்னை:
வெளிநாடுகளில் இருந்து மியான்மர் வழியாக சென்னைக்கு அபூர்வமான வெளிநாட்டு பறவைகளும், விலங்குகளும் கடத்தி வரப்பட்டு உள்ளதாக வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் சென்னை புறநகர் பகுதியில் உள்ள 2 பண்ணை வீடுகளில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தினார்கள். அபூர்வ குரங்கு மற்றும் பல்வேறு வகையான அபூர்வ கிளிகள் உள்ளிட்ட பறவைகள் அந்த பண்ணை வீடுகளில் கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன.
மொத்தமுள்ள 70 அபூர்வ கிளிகள் மற்றும் அபூர்வ குரங்கு ஒன்றையும் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையொட்டி ஒருவர் கைது செய்யப்பட்டார்.