செய்திகள்

காவல் வீர வணக்கநாளை முன்னிட்டு தஞ்சையில் மினிமராத்தான் ஓட்டம்

Published On 2018-10-17 16:11 GMT   |   Update On 2018-10-17 16:11 GMT
தஞ்சையில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு இன்று குந்தவை நாச்சியார் கல்லூரி எதிரே உள்ள ஐ.டி.ஐ. விளையாட்டு மைதானத்தில் மினி மராத்தான் ஓட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர்:

காவல் துறையில் பணியில் இருந்த போது பலியான காவலர்களின் தியாகத்தை போற்று வகையில் வருடம் தோறும் அக்டோபர் 21-ந்தேதி காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து தஞ்சையில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு இன்று குந்தவை நாச்சியார் கல்லூரி எதிரே உள்ள ஐ.டி.ஐ. விளையாட்டு மைதானத்தில் மினி மராத்தான் ஓட்டம் நடைபெற்றது.

போட்டியை கலெக்டர் அண்ணாதுரை கொடி யசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவிசேகர் மற்றும் டி.எஸ்.பி.கள் ரவிச்சந்திரன், ஜெயச்சந்திரன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் இளஞ்செழியன், விளையாட்டு அலுவலர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போட்டியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவிகள் கலந்து கொண்டு ஓடினர். மினி மராத்தான் ஐ.டி.ஐ. விளையாட்டு மைதானத்தில் இருந்து தொடங்கி சரபோஜி கல்லூரி வரை சென்று மீண்டும் விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தது.

Tags:    

Similar News